×

சித்திரை விசுவையொட்டி வெள்ளரிப்பழ அறுவடை தொடங்கியது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு பிறகு, பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் நல்ல விளைச்சலடைந்ததும் அறுவடை செய்யப்படுகிறது. இதில், வடக்கிபாளையம், புரவிபாளையம், டி.நல்லிக்கவுண்டன்பாளையம், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், கோமங்கலம், தேவனூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும், வெள்ளிரி சாகுபடி செய்யப்படுகிறது.
அதிலும், சித்திரை விசுவையொட்டி பூஜைக்கு வைக்கப்படும் காய், பழங்களில் வெள்ளிரிப்பழமும் ஒன்று என்பதால், வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கிராமங்களில் வெள்ளரி சாகுபடி அதிகளவில் இருந்தது. அண்மையில் வெயிலின் தாக்கத்தால், அந்த வெள்ளரிகள், சித்திரை விசுவுக்கு பயன்படுத்தும் படியாக நல்ல விளைச்சலடைந்து பழுத்துள்ளன. சித்திரை விசுவுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளரிப்பழம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில், அனைத்து பகுதியிலும் வெள்ளரி பழத்தை அறுவடை செய்து, சித்திரை விசுவுக்கு முந்தைய நாள் மார்க்கெட்டில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும், அந்நாளில் வெள்ளரிப்பழத்திற்கு நல்ல விலை கிடைக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

The post சித்திரை விசுவையொட்டி வெள்ளரிப்பழ அறுவடை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chitra Vishu ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச...